நிறை பரிதியுலா நிசியில்
இரை தேடுமோர் சர்பம்
சருகிடை நெளிந்தூர்கிறது...
பராபரக் காதலனின்
தியான நிஷ்டையில்
ஆடிக்களைத்த ரம்பா
ஆடை மாற்றிக்கொண்டிருந்தாள்...
கன்னியில் சிக்குண்ட
நாரை ரெண்டை
வளைக்குள்ளிருந்து
வேவு பார்க்கிறது
வயல் நண்டு...
இறுகப் புணரும்
கிணற்றுத்தவளைகளை
குறும்பாய் எட்டிப்பார்த்தவள்
களுக்கென அவை ஆழம் புகவே
அலையலையாய் சிரிக்கிறாள்...
ஏதோ அவசரமாய் சொல்ல
அரைவேக்காட்டில் எழுந்தவனை
மடாரென விறகால் அடித்து
மீண்டும் தூங்க வைத்தான்
மயானச் சித்தன்...
யாவும் கண்டு
மெல்ல உறங்குது இரவு
எப்பொழுதும் போலவே
இயல்பாய் புலர்கிறது பொழுது...
Friday, January 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அருமை.
- ஞானசேகர்
ரௌத்ரன்,
அசத்தல்! இரவின் சில சலனங்களை இவ்வளவு அழகாய் சொல்ல முடியுமா! எனக்கு மிகப் பிடித்திருக்கிறது.
/களுக்கென அவை ஆழம் புகவே
அலையலையாய் சிரிக்கிறாள்...//
ஆழம் புகுந்து அலைகளை எழுப்பியவை தவளைகள் என்றாலும்...
/அரைவேக்காட்டில் எழுந்தவனை
மடாரென விறகால் அடித்து
மீண்டும் தூங்க வைத்தான்
மயானச் சித்தன்...//
அட்டகாசம். நிறைய எழுதுங்கள்.
அனுஜன்யா
அருமையான வரிகள்
ரௌத்ரன் .
// யாவும் கண்டு
மெல்ல உறங்குது இரவு
எப்பொழுதும் போலவே
இயல்பாய் புலர்கிறது பொழுது... //
ரசிக்கும் படியான வரிகள்.
அருமை
வருகைக்கு நன்றி ஞானசேகர்...
வருகைக்கு நன்றி தேவகிமைந்தன்...
நன்றி அனுஜன்யா..
நன்றி கார்த்திக்...
எளிமையான வரிகளில் புரியும்படி அருமையாக எழுதி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..
கவிதை நன்றாக இருக்கிறது தோழர்.3 Iron பற்றிய பின்னூட்டத்திற்கு நன்றி. தொடர்ந்து நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்துங்கள்! வாழ்த்துக்கள்!
வருகைக்கு நன்றி கார்த்திகை பாண்டியன்...
வருகைக்கு நன்றி உமாஷக்தி.ஆம்,நிறைய படங்கள் குறித்து எழுத உத்தேசம்.
Volver என்ற படத்தை நேற்று பார்த்தேன். Pedro Almidov எனக்குப் பிடித்த இயக்குனர். நீங்கள் பார்த்துவிட்டீர்களா?
பார்த்துவிட்டேன் உமா...நல்ல படம் அது..pedro வின் பிற படங்களை பார்த்ததில்லை..பார்க்க வேண்டும்...பார்க்காமலேயே நிறைய படங்கள் கைவசம் உள்ளது....
பெத்ரோவின் படங்கள் பற்றி எஸ் ரா அவர்களின் பதிவு.
Talk to her என்னிடம் உள்ளது கார்த்திக்..ஆனால் இன்னும் பார்க்கவில்லை.எஸ்.ரா பதிவு பார்க்கிறேன் நண்பா...
Post a Comment