Sunday, January 11, 2009

Slumdog Millionaire....



ஒரு திரைப்படம் எத்தனை ரசவாதங்களை தன்னுள்ளே கொண்டிருக்கிறது...வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அற்புதமான படம் பார்த்திருக்கிறேன்.

Slumdog Millionaire.

20 மில்லியன் வெல்ல இன்னும் ஒரே ஒரு கேள்வியோடு காத்திருக்கிறான் ஜமால்.இதுவரை 10 மில்லியனுக்கான கேள்விகளின் சரியான விடைகளை கூறியிருக்கிறான்.மும்பையின் சேரியொன்றில் வசித்த,இளம் வயதிலேயே கலவரத்தில் கண்ணெதிரே தன் தாயை பறி கொடுத்த,தன் வாழ்வின் தருணங்களையெல்லாம் சபிக்கப்பட்டது போல் கடந்திருக்கும் ஒரு சாதாரணன் இதுவரை 10 மில்லியனுக்கான கேள்விகளின் விடைகளை அளித்திருக்கிறான்.எப்படி?

1.அவன் ஏமாற்றினான்

2.அவன் அதிர்ஷ்டக்காரன்

3.அவன் ஒரு அறிவுஜீவி

4.இது 'விதி'க்கப்பட்டது.

இன்னும் ஒரே ஒரு கேள்வி மீதமுள்ள நிலையில்,நிகழ்ச்சி நடத்தும் அனில்கபூரின் சந்தேகம் மற்றும் தன்முனைப்பால் கதாநாயகன் ஜமால் காவல்துறையினரால் ரகசியமாக விசாரிக்கப்படுவதோடு படம் தொடங்குகிறது.

ஜமாலிடம் காவல்துறையினர் கேட்பதெல்லாம் ஒரு தேனீர் விநியோகிக்கும் நபர் 10 மில்லியனுக்கான கேள்விகளின் விடையை எப்படி கூற முடியும்.?அமிதாப் நடத்திய "கோன் பனேகா க்ரோர்பதி" நிகழ்ச்சியை புனைந்து விகாஸ் ஸ்வரப் எழுதிய கேள்வி-பதில்(Q & A) நாவல் திரைக்கதையாக்கப்பட்டிருக்கிறது.

விசாரனையில் விரியும் ஜமாலின் நினைவுகளினூடாக மும்பையின் சேரி வாழ்வு விரிகிறது.இடையிடையே ஜமால் இதுவரை பதில் கூறியிருக்கும் க்ரோர்பதி நிகழ்ச்சி.திரைக்கதையாகட்டும்,மும்பை சேரியினூடாக அலைந்து விரியும் anthony dod mantley யின் ஒளிப்பதிவாகட்டும்,A.R.ரகுமானின் இசையாகட்டும்,முகத்திலறையும் காட்சியமைப்புகளாகட்டும் படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது.

இளம் பிராயத்து குற்றங்களுக்கும்,தண்டனைகளுக்கும்,வெற்றிகளுக்கும்,தோல்விகளுக்கும் பின்னே ஒளிந்திருக்கும் குரூரங்களையும்,அழகியலையும்,கண்ணீரையும் ஒருங்கே வெளிப்படுத்த முயலும் இப்படம் ஒரு கலைப்படைப்பாகியிருக்கிறது.பல காட்சிகளில் சமநிலை இழக்க நேரிடுகிறது.இதற்கு முன் பார்க்கும் பொழுதே பாடாய் படுத்திய இன்னொரு படம்"Life is Beautifull".

Sludog Millionaire இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது.ஆதலால் மேற்கொண்டு கதையை கூறி நியாயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய காண் இன்பத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

நிகழ்ச்சி நடத்துனராக அனில் கபூர் அசத்தியிருக்கிறார்.பெரும்பாலும் புதிய முகங்கள் நிறைய தென்படுகின்றன.எனினும் அனைவரிடமிருந்தும் தேர்ந்த நடிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் Danny Boyle. படத்தின் நிறைகளில் இசையை குறிப்பிட்டாக வேண்டும்.ரகுமானின் பின்னணியிசையில் முதன் முறையாக கனமான மௌனங்களை உணர்ந்தேன்.(ஒருவேளை இப்பொழுதுதான் இசையம்சங்களையெல்லாம் கவனிக்கிறேன் போலும்).

சமீபத்தில் பார்த்த "A Wednesday"(இப்படம் குறித்து தனியாக எழுத வேண்டும்) போன்ற ஹிந்தி படங்கள் இந்திய சினிமாவிற்கான உலக கதவை அகல திறந்திருக்கின்றன.தேவையில்லாத பாடல்கள்,ஜோடனைகளற்ற காட்சிகள்,புதிய கதைக்களங்கள் என இந்திய சினிமா தரமாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இணை இயக்குனராக பணியாற்றியிருக்கும் "Loveleen Tandan " மீரா நாயர் போன்றவர்களிடம் பணியாற்றியவர்.Neeraj Pandey போன்ற திறமையான இய்க்குனர்கள் வரிசையில் அறியப்படுவார் என எதிர் பார்க்கலாம்.

தவறவிடக்கூடாத படம்.

10 comments:

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி ரௌத்ரன் அய்யனாரின் பதிவுகளின் பின்னூட்டங்களில் உங்களை பார்த்திருக்கிறேன் மற்றப்படி இப்பபொழுததான் முதன் முறையாக வருகிறேன்..

இந்தப்படம் பற்றி கேள்விப்பட்டேன் பார்த்து விட வேண்டும் என்னறிருக்கிறேன்..

Anonymous said...

மூன்று கோல்டன் குலோப்
விருதுகள்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ரஹ்மான்!

ரௌத்ரன் said...

வாங்க தமிழன்...வருகைக்கு நன்றி...நானும் நேற்று தான் உங்கள் வலைக்கு வந்தேன்...பகிர்வோம்....

ஆமாம் அனானி..அதை குறிப்பிட மறந்து விட்டேன்.....

குடுகுடுப்பை said...

கண்டிப்பாக படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

KARTHIK said...

// இசையை குறிப்பிட்டாக வேண்டும்.ரகுமானின் பின்னணியிசையில் முதன் முறையாக கனமான மௌனங்களை உணர்ந்தேன்.//

அதனால் தான் கோல்டன் குலோப் விருதுகள் வாங்கிருக்காரு.


நல்ல பதிவு பகிர்தலுக்கு நன்றி.

butterfly Surya said...

நல்ல பதிவு. பார்க்க வேண்டும்.

வாழ்த்துக்கள்.

தோழி உமாஷக்தி மூலம் இங்கு வந்தேன்.

சினிமா உலகம் பற்றிய எனது வலை பார்க்கவும்.

நிறை / குறை சொல்லவும்.

நன்றி

ரௌத்ரன் said...

நன்றி குடுகுடுப்பை...

ஆமாம் கார்த்திக்..ஆஸ்கார் கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..நன்றி

வருகைக்கு நன்றி வண்ணத்து பூச்சியார்...கண்டிப்பாக பகிர்ந்து கொள்வோம்...

KARTHIK said...

படம் பாத்துட்டேன் ரௌத்ரன் படம் அருமையா இருக்கு சின்ன சின்ன விசையம் கடுப்படிக்குது.
படத்துக்கான மொத்தசெலவே 15 M USD தான்.இன்னைக்கு சாயங்காலம் மாலைமலர்ல ஒரு செய்தி படத்துல நடிச்ச குழந்தைகளுக்கு பேசியபடி சம்பளம் வரவில்லையாம்
படிப்பு செலவுக்குன்னு சொன்ன பணத்த கூட தரலியாம்.இத்தனைக்கும் அந்த பசங்க ரயில் நிலையத்துலதான் வசிக்குராங்க அதக்காகவாவது உதவலாம் இந்த மனுசப்பயளுகளே இப்படித்தான் எவ்ளோ வந்தாலும் பத்தாது.

ரௌத்ரன் said...

//இந்த மனுசப்பயளுகளே இப்படித்தான் எவ்ளோ வந்தாலும் பத்தாது.//


உண்மைதான் கார்த்திக்...

Unknown said...

ஹே..படம் பாத்துட்டீங்களான்னு இப்பத்தான் கேட்டேன்.பதிவே போட்டிருக்கீங்க. கடந்த பத்து நாட்கள் அதிகமான வேலைகள், உடல் நிலை சரியில்லை...இப்பத்தான் ப்ளாக் பக்கம் வந்தேன்..உங்க விமர்சனம் சரியான விமர்சனம்.all the best..