Thursday, February 5, 2009

மழையோடை கப்பல்களில்...

மழையோடை கப்பல்களில்
வந்திறங்கும் கனவுகளை

அஞ்சறைப் பெட்டி
துழாவலில்
அகப்படும் சில்லறைகளை

செலவு செய்ய
முடிவதில்லை-ஏனோ
கடைத்தெருவில்
கல்கோனாவும் கிடைப்பதில்லை...

ஆழக்கிணறுள்
அமிழும் குடமிது
ஏறும் வேளை
எடை குறைகிறது...

நீர் அருந்தும் பொழுது
நெல்லி பழுக்கிறது...

8 comments:

ஆதவா said...

சார்.... ஒண்ணும் புரியலைங்க.... கொஞ்சம் விளக்குங்க.

M.Rishan Shareef said...

//ஆழக்கிணறுள்
அமிழும் குடமிது
ஏறும் வேளை
எடை குறைகிறது...

நீர் அருந்தும் பொழுது
நெல்லி பழுக்கிறது... //

அழகு !

ரௌத்ரன் said...

நன்றி ரிஷான்...

விளக்கவா..அந்தளவுக்கு இதில் என்னங்க ஆதவன் இருக்கு."கல்கோனா"ங்கறது ஒரு மிட்டாய் வகையறா என்பதைத் தவிர..வருகைக்கு நன்றி :)

KARTHIK said...

// ஆழக்கிணறுள்
அமிழும் குடமிது
ஏறும் வேளை
எடை குறைகிறது...//

ரசிக்கும் படியான வரிகள்

ரௌத்ரன் said...

நன்றி கார்த்திக்...

இப்னு ஹம்துன் said...

நல்லா இருக்குங்க..

இந்த வலைப்பூவில் கவிதை என்றும் கவுஜ என்றும் சுட்டுச்சொல் பகுத்திருப்பதிலேயே உங்கள் ரசனை விளங்குகிறது.

ரௌத்ரன் said...

நன்றி இப்னு ஹம்துன்...சௌதியில் வலைப்பூக்கள் எழுத அனுமதி உள்ளதா..?அநேகமாக அடுத்த மாதம் பணி நிமித்தம் வர நேரலாம்.நேர்ந்தால் நிச்சயம் உங்களை சந்திக்கிறேன்...வருகைக்கு நன்றி...

anujanya said...

நல்லா இருக்கு ரௌத்ரன்

அனுஜன்யா