Thursday, July 31, 2008

Close-up



முதன் முதலாக பார்த்த ஈரானிய சினிமா “Children of heaven”பிறகு Baran,color of paradise,turtles can fly என நீண்டு அப்பாஸ் கியராஸ்தமியின் படங்கள் பார்க்க கிடைத்தது.”Taste of cherry” தந்த டேஸ்டில் கியராஸ்தமியின் தீவிர ரசிகனாகிவிட்டேன்.Close-Up நேற்று முன் தினம் தான் பார்த்தேன். சுயம் என ஒன்றிருக்கிறதே அது ஏன் மரியாதையை எதிர்பார்க்கிறது...?இதோ எழுதிக்கொண்டிருக்கிறேனே இச்செயலைத் தூண்டும் மனதின் நோக்கம் என்ன?ம்ஹீம் இப்படியே கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தா நேத்து போலவே இன்னைக்கும் விடிஞ்சுடும்.கதைக்கு வருவோம். பிரபல (ஈரானிய இயக்குனர்.............) என தன்னை கூறிக்கொண்டு தம் குடும்பத்தினரை ஏமாற்றியதாக ஒருவர் கொடுக்கும் புகார் ஒன்று தினசரியில் செய்தியாகி இயக்குனர் அப்பாஸ் கியராஸ்தமியை ஈர்க்கிறது..குற்றம் சாட்டப்பட்டவனின் நோக்கத்தையும் மனதையும் அறிய விரும்பும் கியராஸ்தமி குற்றம் சாட்டப்பட்டவனை சிறையில் சென்று சந்திக்கிறார்.அப்பாஸ் அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது அவன் நீங்கள் யார்?என்னை உங்களுக்கு தெரியுமா எனக் கேட்கிறான்.பிறகு அப்பாஸ் எனத் தெரிந்ததும் துனுக்குறுகிறான். தன்னை தன் இயலாமையை படமாக்குங்கள் என்பவனிடம் விடைபெறும் கியராஸ்தமி இந்த வழக்கை படமாக பதிவு செய்ய நீதி மன்றத்திடமும் வழக்கு தொடுத்த குடும்பத்தினரிடமும் அனுமதி கோறுகிறார். நிகழும் விசாரனையில் குற்றம் சாட்டப்பட்டவனின் மன உணர்வுகள் நெருக்கமாக பதிவு செய்யப்படுகிறது.உண்மை சம்பவத்தை தழுவிய படம் என டைட்டிலில் வருகிறது.ஆனால் படம் பார்க்கிறோமா?அல்லது ஈரான் நீதி மன்றத்தில் இருக்கிறோமா? என சந்தேகம் கொள்ளும் படி இருக்கிறது படம் செய்யப்பட்ட விதம்.Climax தரும் சில நொடி பரவசம் தான் படம் என்பதால் எனது கத்தரியை இங்கேயே போட்டுவிடுகிறேன்.

4 comments:

Anonymous said...

நல்ல பதிவு. இந்த படத்தை வெகு நாட்களாக பார்க்க விரும்பினேன். இன்னமும் காரியம் ஆகவில்லை. அப்பாஸின் ‘Taste of cherry’ அத்தனை சுகமில்லை. ஆனாலும் அவரின் ‘Ten’ஐ ரசித்தேன்.

ரௌத்ரன் said...

வருகைக்கு நன்றி அரவிந்த்...

வைத்தி said...

ரௌத்திரன்:

'குளோஸ்-அப்'

சுருக்கமான மற்றும் தெளிவான விமரிசனம். நன்று.

நானும் இப்படத்தை சில மாதங்களுக்கு முன்னர் பார்த்தேன். உங்க விமரிசனம் படித்த உடன் படத்தை பற்றிய நினைவுகள் நிழலாடுகின்றன.

அப்பாசின் வேறு சில படங்களையும் - 'டேஸ்ட் ஆப் செரி' உட்பட - பார்த்ததுண்டு.

வண்ணத்துப் பூச்சியாரின் வலையில் 'பேபெல்' படம் குறித்து விமரிசனம் எழுதுவதாக பின்னூட்டம் இட்டு இருந்தீர்கள். தாங்களுக்கு அப்படம் குறித்து எழுத நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நார்வேயிலிருந்து
வைத்தி

ரௌத்ரன் said...

வருகைக்கு நன்றி வைத்தி...கண்டிப்பாக எழுதுவேன்..என் புதிய தளம் http://roudran4.blogspot.com இனி இங்கே வரவும்...