Tuesday, June 10, 2008

இறந்த காலத்தில் வாழ்தல்...

சற்றே கவனக்குறைவில்
சிந்திவிட்ட மைத்துளிகளை
கடக்க முடியாது தவிக்கிறது கவிதை...

பாசி படர்ந்த குளக்கரையோரம் நடக்கிறேன்
எனை நோக்கி பாய்ந்து வருகின்றன
என்றோ நானெறிந்த
சில நூறு தவளைக்கற்கள்...

நான் கொன்ற சர்ப்பங்கள்
என் கால்களை சுற்றுகின்றன
சிலந்திகள் என் தலையில்
கூடுகள் கட்டுகின்றன...

சிறகுடைக்கப்பட்ட
கிளிகளும் மைனாக்களும்
எனைச் சபிக்கின்றன...

அக்கு அக்காய் சிதைக்கப்பட்ட
ரோஜாக்களும் தொண்டைக்குள்
துடித்த மீன்களும்
ஈனமாய் எனைப்பார்க்க-ஒரு
மாபெரும் மன்னிப்பு கடிதத்தை
என் மரணத்தால்
எழுதிக்கொண்டிருக்கிறேன்....

4 comments:

லேகா said...

ரௌத்ரன் தேர்ந்த கவிதையை படித்த அனுபவம்..அருமை!!

ரௌத்ரன் said...

வருகைக்கு நன்றி...

sukan said...

செவ்வனே முதிர்ந்த ஒரு கவிதை என்று உணர்ந்தேன். மிக நிறைவு ஏற்பட்டது இக்கவிதையை படிக்கும் போது.

ரௌத்ரன் said...

வருகைக்கு நன்றி நர்மதா..