மீன்கொத்தியின் அலகினின்று
நழுவி விட்ட மீனொன்று
வெளியில் நீந்தி
விழுந்து கொண்டிருந்தது,
இரவில்
எறும்புகளாய் உருமாறும்
எழுத்துக்கள் என்னை
இழுத்து சென்று போடும்
அதே குளத்தில்....
*************************
மேய்ப்பரற்ற நகரத்தில்
தனித்து விட்ட ஆடு
வழி விசாரித்தது
அய்யனார் கோவிலுக்கு...
போஸ்டர் மேயும் காளை
போட்டியாளர் கழுதையை
கண்காட்டியது...
கழுதை காட்டிய திசையில்
ஓடிக்கொண்டிருந்தார் அய்யனார்
அரிவாள் சுத்தியல்
என ஆயுதங்கள் துரத்த...
*****************************
என் கட்டிலின் அடியில்
படுத்து கிடக்குமந்த சாதுவான
கறுப்பு பூனை
நடுச்சாமங்களில்
ஒளிரும் அதன் கண்கள்
உலுக்கியெழுப்பும் தருணங்களில்
விளக்கு பொருத்துவேன் பதறி
ஒய்யாரமாய் மதிலேறுமது
இரவை சுவைத்தபடி...
Wednesday, February 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அருமையான துண்டுகள். மனதில் போர்வையாக விரிந்து விட்டது
// போஸ்டர் மேயும் காளை
போட்டியாளர் கழுதையை
கண்காட்டியது...
மேய்ப்பரற்ற நகரத்தில்
தனித்து விட்ட ஆடு
வழி விசாரித்தது
அய்யனார் கோவிலுக்கு...//
நல்லாருக்கு :-))
மூன்றுமே நல்ல கவிதைகள். வித்தியாசமானவை.
அனுஜன்யா
நன்றி spidey...
நன்றி கார்த்திக் :)
நன்றி அனுஜன்யா...
முதல் கவிதை மிகவும் பிடித்தது...நல்ல கவிதைகள் ரெளத்ரன்..வாழ்த்துக்கள்
Post a Comment